Breaking

Post Top Ad

Sunday, June 17, 2018

யாழில் பதற்றம் - பொலிஸார் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டினால் பதற்ற நிலை ஏற்பட்டது.

சுன்னாகம் பகுதியில் இரு இளைஞர்கள் குழுக்கள் வாள்களுடன் தாக்கிக் கொண்டதை அடுத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
ஏழாலை மற்றும் குளமன்காடு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் குழுக்களே வாள்களுடன் மோதிக் கொண்டனர்.


இந்த அனர்த்தம் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மல்லாகத்தைச் சேர்ந்தவர் என்றும் சுமார் 28 வயதுடையவர் என்றும் தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மற்றுமொரு இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மல்லாகம் சகாயமாதா கோவில் பெருநாள் இன்று மாலை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சேர்ந்த 4534 என்ற இலக்கமுடைய பொலிஸ் அதிகாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டினால் குறித்த இளைஞன் உயிரிழந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆலய பெருநாளில் பங்கேற்க வந்த இளைஞர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages