Breaking

Post Top Ad

Tuesday, June 5, 2018

நாசிவன்தீவு கிராமத்தில் திருமூலர் அறநெறி வகுப்பு ஆரம்பம்

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசிவன்தீவு கிராமத்தில் திருமூலர் அறநெறி வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சி செயலாளரும், முன்னாள் மாகாண சபை விவசாய அமைச்சருமாகிய கி.துரைராஜசிங்கம், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான கி.சேயோன், எஸ்.நல்லரெட்ணம், கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் அபிவிருந்தி சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


வெகு காலமாக நடைபெறாமல் தடைப்பட்டு இருந்த அறநெறி வகுப்பைப் பற்றி அப்பிரதேச மாதர் அபிவிருத்தி சங்கத்தினர் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று பிரதேசக் கிளை செயலாளருமாகிய கனகரெத்தினம் கமலநேசன் என்பவரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதைத் தொடர்ந்து சுவிஷ் நாட்டில் வாழும் சிவன்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த கா.செல்வரெத்தினத்தின் உதவியோடு அறநெறி வகுப்பை மீண்டும் தொடங்குவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டார். இதற்கமைய அறநெறி வகுப்பு தொடங்கப்பட்டது.

அங்கு உரையாற்றிய கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன்

மாணவர்கள் எதிர்கால நிகழ்வுகளை தீர்மானிப்பவர்கள். அவ்வாறு எதிர்காலத்தை தீர்மானிப்பவர்களாக நீங்கள் இருப்பவர்களாக இருந்தால் பிறரின் கருத்துக்கு மதிப்பளிப்பவராகவும், விட்டுக் கொடுக்கும் தன்மையுடையவர்களாகவும் சகிப்புத்தன்னை உடையவர்களாகவும், புறம் பேசாதவர்களாகவும் பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்படாதவர்களாகவும் கூடி வாழும் ஒற்றுமைத்தன்மை உடையவர்களாகவும் வாழ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

சிவன்தீவு மக்களின் வாழ்க்கை மிகவும் பின்தங்கியுள்ளது அதனை மேன்படுத்த வேண்டும் அவ்வாறு செய்வதாக இருந்தால் கிராமத்து இளைஞர்கள் ஒற்றுமைப்பட்டு செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages