Breaking

Post Top Ad

Sunday, June 3, 2018

கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட் ஆளுனரின் மனைவி பொலிஸாருடன் சுதந்திரமாக செல்கின்றார்

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவியையும், மகளையும் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநரின் மனைவி சுதந்திரமாக வெளியில் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

விகாரையொன்றில் வைத்து பெண்ணொருவரை அச்சுறுத்தி, தாக்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் ஆளுநரின் மனைவி மற்றும் மகளுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.


குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நீதிமன்றுக்கு வருகைத்தராமை மற்றும் தொலைபேசியூடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட குற்றச்சாட்டில் ஆளுநரின் மனைவி மற்றும் மகளை கைது செய்யுமாறு நீதவான் ரங்க திசாநாயக்க நேற்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட வேண்டிய ஆளுநரின் மனைவி பொலிஸ் பாதுகாப்புடன் வெளியில் சென்று வருகின்றார்.
இவருடன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர ஆகியோரும் உடனிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தால் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒருவர் வெளியில் சுதந்திரமாக செல்வதே தண்டனைக்குரிய விடயமாக காணப்படுகின்ற போது, இவர் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியில் செல்வது அனைவர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages