Breaking

Post Top Ad

Friday, June 29, 2018

மண்முனை மேற்கில் 59 மாணவர்களுக்கு சமுர்த்தி புலமைப்பரிசில் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் 59 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை(28ஆம் திகதி) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.


சமுர்த்தி தலைமையக முகாமையாளர் த.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், கணக்காளர் வீ.வேல்ராஜசேகரம், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி எம்.தமயந்தி, சமுர்த்தி முகாமையாளர் திருமதி என்.கோள்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டு புலமைப் பரிசில் நிதிக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.


வருடந்தோறும் க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தமது கல்வி வளர்ச்சிக்காக சமுர்த்தி திணைக்களத்தினால் வழங்கப்படும் இப் புலமைப் பரிசில் திட்டத்தில், மண்முனை மேற்கு பிரதேசத்திலிருந்து 2018, 2019ஆம் ஆண்டுகளுக்காக 59 வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு ஒரு மாணவருக்கு 24மாதக் கொடுப்பனவாக 36,000.00 (முப்பத்தாறாயிரம் ரூபாய்) பெறுமதியான புலமைப் பரிசில் இதன்போது வழங்கப்பட்டுள்ளது.














No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages