Breaking

Post Top Ad

Sunday, June 10, 2018

திடீர் சுற்றிவளைப்பில் 35 பேர் கைது

திருகோணமலை மாவட்டத்தில், பொலிஸாரால் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் ​போது, 35 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியோர், சந்தேகத்துக்கிடமாகச் சுற்றித்திரிந்தோர், நீதிமன்ற அழைப்பாணைக்குப் பின் தலைமறைவானோர், கைகலப்பை ஏற்படுத்தியோர், தேடப்பட்டு வந்த குற்றவாளிகள், சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டோர் போன்றோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர் என, பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages