Breaking

Post Top Ad

Tuesday, May 29, 2018

கடந்த காலங்களில் பல சாதனைகள் புரிந்த 'கோரா" திடீர் மரணம்!


ஹற்றன் பொலிஸ் வலயத்தின் மோப்ப நாய் பிரிவில் இருந்த கோரா என்ற நாய் இன்று காலை உயிரிழந்துள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.

08 வயதினைக் கொண்ட கோரா மோப்ப நாய் கடந்த மூன்று வருடங்களாக ஹற்றன் பொலிஸ்வலயத்தில் சேவை புரிந்து வந்துள்ளது.

சிவனொளிபாதமலை பருவகாலத்தின் போதுசட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட போதைப்பொருளை இனங்கண்டு சந்தேகநபர்களை கைது செய்வதற்கு உதவி வழங்கியிருந்தது.


இந்த கோரா என்ற பொலிஸ் மோப்ப நாய் மத்திய மாகாணத்தில் உள்ள மோப்ப நாய்கள் பயிற்சி வழங்கும் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு பயிற்சி ஒன்றிற்காக அழைத்து சென்ற போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோப்ப நாய் அம்பாறை, மட்டக்களப்பு, பண்டாரவளை ஆகிய பொலிஸ் நிலைய பிரதேசங்களில் சேவை புரிந்து இறுதியாக ஹற்றன் தலைமை பொலிஸ் நிலையத்தில் 03 வருடங்களாக சேவை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages