இன்று (18) கிரான் ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதி, நியாயம், உண்மை என்பவற்றிற்கு அப்பாற்பட்ட விதத்தில் எமது தமிழ் உறவுகள், போராளிகள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிகழ்வு தமிழ் மக்களுக்கு மனரணமாகவே இருக்கின்றது.
தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் இந்த பேரழிவுக்கும், அநீதிக்கும் இன்னும் நீதிக் கதவுகள் திறக்கப்படாத ஒரு நிலை இருக்கின்றது. இருப்பினும் நாங்கள் தொடர்ந்தும் இந்தப் பதிவினை சர்வதேசத்தின் கண்களுக்குப் படும்வரை, காதுகளுக்கு எட்டும்வரை செய்துகொண்டிருப்போம். மறக்கமுடியாத மனத்துயரோடு சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தினை நீதியின் மூலமாகத் தான் தீர்த்து வைக்க முடியுமே தவிர இதனை மறைத்து, மறுத்து எதுவும் செய்துவிட முடியாது.
எனவே அன்று இழந்த எமது உறவுகள், போராளிகள் அனைவரின் ஆத்மாக்களும் சாந்தியடைய வேண்டும் என்று நாங்கள் இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்வதோடு அவர்களுக்கான நீதி உள்நாட்டில் கிடைக்காவிட்டாலும் சர்வதேச மட்டத்திலாவது கிடைப்பதற்கு நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.