Breaking

Post Top Ad

Thursday, May 10, 2018

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் KPL போட்டிகளில் ரோயல் மற்றும் கிங்ஸ் II சம்பியன்

கோட்டைமுனை விளையாட்டு கழகம் வருடம் தோறும் நடாத்தும் KPL போட்டியில் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்றது.

இங்கு நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் கிங்ஸ் II அணியும் கிரிக்கெட் போட்டியில் ரோயல் அணியும் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

கடந்த 05ம் திகதி மாவட்ட அரசாங்க அதிபரும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் போசகருமான மாணிக்கம் உதயகுமார் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட  இப்போட்டிகளில் 06 அணிகள் பங்கு பற்றின. 06ம் திகதி உதைபந்தாட்ட போட்டிகள் முதலில் நடைபெற்று அதைத் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்பட்டது.

கிரிக்கெட் போட்டி
07ம் திகதி இறுதிப்போட்டிகள் நடைபெற்றது கிரிக்கெட் போட்டியில் ரோயல் அணியும் லயன்ஸ் அணியும் மோதின இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் அணி 81 ஓட்டங்களை பெற்றது இதில் பாலு 16 பந்து வீச்சுக்கு 40 ஓட்டங்களை பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லயன்ஸ் அணியினர் 69 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவிக் கொண்டது ரோயல் அணிக்கு ரோய் அவர்களும் லயன்ஸ் அணிக்கு உமேஸ் அவர்களும் தலைமை தாங்கினர். லயன்ஸ் அணிக்கு முகாமையாளராக திவா அவர்களும் ரோயல் அணிக்கு முகாமையாளராக கௌதமன் அவர்களும் செயற்பட்டது குறிப்பிடத்தக்கது.

உதைபந்தாட்டம் -
உதைபந்தாட்ட இறுதிப்போட்டிக்கு கிங்ஸ் II அணியும் சலஞ்சஸ் அணியும் மோதியது இதில் கிங்ஸ் II அணி 4:1 என்கின்ற கணக்கில் சலஞ்சஸ் அணியை வெற்றி கொண்டது. கிங்ஸ் II அணிக்கு குமரன் அவர்களும் சலஞ்சஸ் அணிக்கு யசோ அவர்களும் தலைமை தாங்கினர். கிங்ஸ் II அணிக்கு முகாமையாளராக சுதன் அவர்களும் சலஞ்சஸ்  அணிக்கு முகாமையாளராக புஸ்பா அவர்களும் செயற்பட்டது குறிப்பிடத்தக்கது.

விசேட அம்சமாக சின்னத்தம்பி 04 பந்து வீச்சில் 04 விக்கெட்டுக்களையும் ரஞ்சன் 03 பந்து வீச்சில் 03 விக்கெட்டுக்களை பெற்று ஹட்றிக் சாதனையையும்துடுப்பாட்டத்தில் பாலு ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களை பெற்று 50 ஓட்டங்களை கடந்த ஒரு வீரராக திகழ்ந்தார்.

இப்போட்டிகள் அனைத்தையும் செ.ரஞ்சன் அவர்கள் ஒழுங்கமைத்து நடாத்தியது குறிப்பிடத்தக்கது.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages