Breaking

Post Top Ad

Tuesday, May 8, 2018

போதைப்பொருட்களை ஒழிக்க ‘ஓட்டோ சாரதிகள் ஒத்துழைக்க வேண்டும்’

போதைப்பொருட்களை ஒழிக்க, ஓட்டோ சாரதிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

காத்தான்குடி ஓட்டோ சாரதிகள் நலன்புரிச் சங்கத்தால் காத்தான்குடிக் கடற்கரையில் நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சங்கத்தின் தலைவர் என்.எம்.அபுல்பசால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர், 

“போதைப்பொருட்கள், தற்போது ஓட்டோக்களில் கடத்தப்படுகின்றன. அதேபோன்று, ஒரு சில ஓட்டோ சாரதிகள், போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர். இதனால் சமூகச் சீரழிவுகள் இடம்பெறுகின்றன" என்று குறிப்பிட்டார்.

இதனாலேயே, ஓட்டோ சாரதிகளின் ஒத்துழைப்பைக் கோரிய அவர், போதைப்பொருட்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால், உடனேயே பொலிஸாருக்குத் தகவலை வழங்க வேண்டும் என்றும் கோரினார்.


“வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு வருபவர்கள், ஓட்டோவொன்றை வாங்கி, அதனை ஓடுகின்றனர். இதுவே அவர்களின் பிரதான தொழிலாகவும் காணப்படுகின்றது.
“இதனால் நாளுக்கு நாள் ஓட்டோக்கள் அதிகரித்தே செல்கின்றன. எல்லோரும் ஓட்டோக்களை வாங்கி ஓடினால், அது சிறந்ததாக அமையாது. எனவே, ஓட்டோக்களைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages