வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கனகரெட்ணம் கமலநேசன், உறுப்பினருக்கான தனது முதலாவது சம்மபளத்தினை விசேட தேவையுடைய குடும்பத்திற்கு வழங்கினார்.
வாழைச்சேனை பிரதேச சபையினால் வழங்கப்பட்ட முதலாவது சம்பளப் பணம் 15,000 ரூபாவினை நாசிவந்தீவை பிறப்பிடமாக கொண்ட கணவனின் உதவியற்ற விசேட தேவையுடைய இரட்டை குழந்தைகளின் தாயான கணபதிபிள்ளை சரோஜா என்ற யுவதிக்கு நேற்று வழங்கியுள்ளார்.
அத்துடன், குறித்த யுவதியின் வீட்டு சுற்றுச் சூழல் சிரமதானம் செய்து கொடுக்கப்பட்டதுடன், வளவினுள் வேலியடைப்பதற்கான செலவீனத்திற்கு குறித்த முதலாவது சம்பளப் பணம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.