Breaking

Post Top Ad

Thursday, May 31, 2018

வவுணதீவில் சர்வதேச புகைத்தல்,மது எதிர்ப்பு சமுர்த்தி கொடி தினம்

சர்வதேச புகைத்தல்,மது எதிர்ப்பு கொடி தினம் சமுர்த்தி திணைக்களத்தினால், நாடுபூராவும் வியாழக்கிழமை 31ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.

இந் நிகழ்வு வவுணதீவு பிரதேசத்திலும் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன்போது சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பிரதிநிதிகளால் முதலாவது சமுர்த்தி கொடியினை, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களுக்கு அணிவித்து பிரதேசத்தின் கொடிதின நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. எஸ்.சதாகரன், சமுர்த்தி திணைக்கள அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages