Breaking

Post Top Ad

Wednesday, May 30, 2018

வவுணதீவு பிரதேச செயலகத்தில் வைத்திய பரிசோதனை முகாம்

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால், உடற் பரிசோதனை முகாம் பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று புதன்கிழமை (30ஆம் திகதி) நடைபெற்றது.

இவ் வைத்திய பரிசோதனையின்போது இரத்த அழுத்தப் பரிசோதனை, எடை பரிசோதனை, இரத்தப் பரிசோதனை உள்ளிட்ட நோய்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன் நோய்கள் தொடர்பில் ஆலோசனையும் வழங்கப்பட்டது.


இதன்போது பிரதேச செயலக ஊழியர்கள் கிராம சேவை அலுவலர்கள், அரச திணைக்கள வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டு சேவையினைப் பெற்றுக்கொண்டனர்.

மண்முனை மேற்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் திருமதி. எஸ்.சதாகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.இளங்கோ, நாவற்காடு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் எஸ்.துஷ்யந்தன் உள்ளிட்ட சுகாதார திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டு இவ் இலவச பரிசோதனைகளை மேற்கொண்டனர்.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages