இச் செயலமர்வில் மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், ஆசியா மன்றத்தின் எச்.எஸ்.ஜி.பி திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி கோபா தம்பிகுமார் மற்றும் சிரேஸ்ட தொழில்நுட்ப ஆலோசகர் சுபாகரன், தொழில்நுட்ப ஆலேசகர் ஜெகதீசன், திட்ட இணைப்பாளர்கள் உட்பட மாநகரசபை பிரதி ஆணையாளர், மாநகரசபைச் செயலாளர், கணக்காளர், பொறியியலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மாநகர ஆணையாளரினால் ஆசியா மன்றம் மாநகரசபையினூடாக மேற்கொள்ளப்பட்ட திட்ட நடைமுறைகள் பற்றியும், மாநகரசபை எதிர்நோக்குகின்ற சவால்கள் பற்றியும் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசியா மன்றத்தின் எச்.எஸ்.ஜி.பி திட்டப் பணிப்பாளரினால் மாநகரசபையின் நிதியீட்டம் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பாகவும், நிதியீட்டத்திற்கேற்ப திட்டங்களை வகுத்தல், அதனைச் செயன்முறைப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் பல்வேறு தெளிவுரைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.