மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலய மாணவர்கள் சமூகவிஞ்ஞானப் போட்டியில் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும், அமிர்தலிங்கம் அஜந்தா என்ற மாணவி தரம் - 7ல் தேசிய ரீதியில் முதலிடத்தினையும், அதே வகுப்பில் ஜடேஸ்வரன் உதேசினி தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை வரலாற்றில் தேசிய ரீதியாக இப்பாடசாலை இவ்வாறான தேசிய சாதனையை இதுவரை புரியாத நிலையிலும் சமூகவிஞ்ஞானப்போட்டியில் புரிந்துள்ளமை எடுத்துக்காட்டத்தக்கதாகும்.
அதிகஸ்ட பாடசாலையான இப்பாடசாலை, ஆரம்பிக்கப்பட்டு 16 வருடங்களே கடந்துள்ளன. இங்குள்ள மக்கள் அன்றாடம் கூலிவேலை செய்து வாழ்கின்ற நிலையிலும், வீட்டிலே வசதி வாய்ப்புக்கள், பொருளாதார கஸ்ட நிலைகள் உள்ளதான போதிலும் சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
பிரத்தியேக வகுப்புக்கள் இல்லாத சந்தர்ப்பத்திலும் பாடசாலை கற்றலை மாத்திரம் முழுமையாக பயன்படுத்தி இச்சாதனையை புரிந்துள்ளனர்.
மாணவர்களின் சாதனைக்கு, வழிகாட்டியாக நின்று கற்பித்த வைரமுத்து இராஜகுலசிங்கம் ஆசிரியருக்கும், சோ.சுந்தரமோகன் அதிபருக்கும் பாடசாலை சமூகத்தினர் நன்றியைத் தெரிவித்ததுடன், மாணவர்களுக்கு பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.