Breaking

Post Top Ad

Tuesday, May 8, 2018

எங்கள் அரசாட்சிக்கு அரசியல் கள்வர்களும், மோசமான போக்கிரிகளும் தேவையில்லை – மட்டு. மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரி


அரசியல் கட்சிகள் நேர்மையாக செயற்பட வேண்டும், அந்த நேர்மை அவர்களின் செயற்பாட்டின் மூலமாக எடுத்துக்காட்ட வேண்டும். அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக பலர் பலவிதமான விடயங்களை செய்வதற்கு முயற்சியெடுத்திருக்கின்றார்கள். அவர்கள் அதிகாரத்தைப் பெறுவதற்காக பகல் கனவு கண்டிருக்கின்றார்கள். என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார். மட்டக்களப்பு மாவடிவேம்பில் இன்று திங்கட்கிழமை 7ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மேதினக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எங்களுக்கு ஒரு புதிய வேலைத் திட்டம்தான் தேவையாக இருக்கின்றது. அதற்கு அரசியல் கள்வர்கள் தேவையில்லை. மோசமான அரசியல் போக்கிரிகள் எமக்குத் தேவையில்லை, கொலையாளிகள் தேவையில்லை அதேபோல் லஞ்சம் கொடுப்பவர்களும் லஞ்சம் வாங்குபவர்களும் எமக்குத் தேவையில்லை. 

உங்களுக்குத் தெரியும் நாங்கள் கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் சிக்குண்டு அல்லுண்டு வந்திருக்கின்றோம், ஆயிரக்கணக்கான உயிர்ச் சேதங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டன. ஏல்லா இனத்தைச் சேர்ந்த தலைவர்களும் மரணத்தை தழுவிக்கொண்டார்கள். முப்படை உப்பட பலர் இறந்துபோனார்கள் இதேபோல் விடுதலைப் புலிகளின் தலைவர்களும் இறந்துபோனார்கள் அந்த யுத்தத்தை ஒரு பாடமாகக் கொண்டு இந்த நாட்டிலே இனி மீண்டும் ஒரு யுத்தம் நடைபெறாதவாறு நாம் ஒன்றிணைய வேண்டும் அதற்கு தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்களுக்கும் பங்கு இருக்கின்றது.

தேசிய ஒற்றுமை ஏற்படுத்துவதற்கும், மக்கள் மத்தியிலே சினேகபூர்வமான வாழ்க்கை ஏற்படுத்துவதற்கும் தொழிற்சங்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. நாங்கள் முப்பது வருடகால யுத்தத்திற்குப் பிறகும்  அதற்குப் பின்னரான ககலப் பகுதியை கடந்து வந்திருக்கின்றோம்.

இப்போது யுத்தம் முடிந்து பத்து வருடமாகின்றது, எனவே இந்த நாட்டிலுள்ள எல்லா இன மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக கடந்த மூன்று வருட காலத்திலே யுத்தத்திற்கான பல விடயங்களை தேடிப் பார்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

பயம், சந்தேகம் நம்பிக்கையில்லாமல் வாழக்கூடிய சூழ்நிலையை எல்லா இன மக்களுக்கும் இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதே போன்று தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக எமது அரசாங்கம் அற்பணிப்புடன் பணியாற்றியிருக்கின்றது.

நாங்கள் இந்த நாட்டிலே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக செய்கின்ற எல்லா நடவடிக்கைகளையும் சில எதிரணியைச்; சேர்ந்தவர்கள் கேலித்தனமாக பரிகாசமாக அதை பேசிக்கொடுக்கிறார்கள்.

இனிமேல் இன்னுமொரு யுத்தம் எற்படாதவாறு மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக எமது அரசாங்கம் இன்னும் முழுமையாக வெற்றிபெற முடியவில்லை. யுத்தத்தின் மூலமாகவோ துப்பாக்கிகள் மூலமாகவோ பிரச்சனையை தீர்த்துவைக்க முடியாது. முனிதாபிமானம் ஊடாகவே நாங்கள் பிரச்சனையை தீர்த்துவைக்க முடியும். அதற்காத்தான் நாங்கள் அற்பணிப்புடன் சேவை செய்ய வேண்டும்.  



எனவே அவர்கள் அற்பணிப்பாகவும் நேர்மையாகவும் செயற்படுவது மாத்திரமல்லாது அதனை எடுத்துக்காட்டவேண்டும். அதிகாரத்தில் இல்லாதவர்கள் எதையும் எப்படியும் சொல்லலாம். இந்த சிக்கலான பிரச்சனையை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். தொழிற்சங்கங்களில் இருப்பவர்களிடம் நீங்கள் இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த ஒன்றுசேர அழைப்பு விடுக்கின்றேன்.


அரசியல்வாதிகள் நேர்மையாக செயற்பட வேண்டும் தமது அதிகாரத்தை பெறுவதற்காக மக்களை ஏமாற்றக்கூடாது.

என்னைப் பார்த்து சொல்லியிருக்கின்றார்கள் 2020 ஆண்டில் இளைப்பாறவுள்ளீர்களா என கேட்கின்றார்கள். சமுக வலைத்தளங்களிலெல்லாம் நான் இளைப்பாறிச் செல்வேன் என்று தெரிவித்திருக்கின்றார்கள். 2020 ஆம் ஆண்டில் நான் இளைப்பாறிப் பேகமாட்டேன். நான் இன்னும் செய்வதற்கு பல வேலைகள் இருக்கின்றது.


இந்த நாட்டிலே மக்கள்மீது அன்பு செலுத்தகின்ற அரசியல் தலைவர்கள்தான்எமக்குத் தேவை. 2020ஆண்டிலே புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்க சிலர் பகல் கனவு கண்டுகொண்டிருக்கின்றார்கள்.

தேசிய ஒற்றுமை எங்கு ஏற்படுகின்றதோ அங்கு நாங்கள் இருப்போம். இந்த நாட்டிலே ஏழ்மை வறுமையை எங்கு இல்லாமல் படுத்த முடியுமோ அங்கு நாங்கள் இருப்போம்.  என தெரிவித்தார்





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages