Breaking

Post Top Ad

Sunday, May 6, 2018

செவிப்புலனற்ற இளைஞன் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பு - மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு, கூழாவடி - கருவேப்பங்கேணி பகுதியில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (சனிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ரயில் பாதை வழியாக சென்ற குறித்த இளைஞன் மீது ரயில் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மட்டக்களப்பு, இருதயபுரத்தினைச் சேர்ந்த உதயன் ஜீவேந்திரன் (27வயது) என்னும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த இளைஞன் செவிப்புலனற்றவர் என்பதால், தண்டவாளம் ஊடாகச் செல்லும் போது புகையிரதம் வருவதை அவதானிக்காத நிலையிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரியவருகிறது.

குறித்த இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages