Breaking

Post Top Ad

Monday, May 21, 2018

மாடு மேய்க்க சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

வவுனியா - சிதம்பரபுரம், கற்குளம் பகுதியிலிருந்து மாடு மேய்ப்பதற்காக சென்ற குடும்பஸ்தரொருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நாகன் கோணாமலை எனும் 64 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள், அருகிலிருந்தவர்களின் உதவியுடன் தேடி சென்றுள்ளனர்.

இந்த நிலையிலேயே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தற்போது பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

திடீர் மாரடைப்பே மரணத்திற்கு காரணமாக இருக்கும் என சந்தேகப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages