விமான நிலையத்திலுள்ள தீர்வையற்ற வர்த்தக நிலையத்தின் களஞ்சிய அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான உபகரணங்கள் தீயில் கருகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக, அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது.
விமான நிலைய மற்றும் விமானப்படையினர் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக விமான நிலைய பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மின்சார உபகரணங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்திற்கு சொந்தமான களஞ்சிய அறையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது பெக்கோ இயந்திரம் ஒன்று பயன்படுத்தப்பட்டு களஞ்சிய அறையின் சுவரை உடத்து உள்ளே செல்வதற்கு விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில் கட்டுநாயக்க பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.