
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் சிங்களப்பாட ஆசிரியை திருமதி.பிரியங்கனி திசாநாயக்க அவர்களின் ஒழுங்குபடுத்தலுடனும், அதிபர் இராசதுரை-பாஸ்கர் அவர்களின் வழிகாட்டல்கள், ஆலோசனைகளுடன் வெள்ளிக்கிழமை(4.5.2018) கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் இ.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளரும், ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பிரதி பொதுமுகாமையாளருமான எந்திரி வை.கோபிநாத்இபிரதி அதிபர் கே.சசிகாந், பி.உபயதிபர்களான எஸ்.சதீஸ்வரன், எஸ்.லோகராசா, ஆரம்பப்பிரிவு பகுதித்தலைவர் திருமதி. வனஜா வாலநாயகம் உட்பட ஆசிரியர்கள்இமாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
இதன்போது கயிறுயிழுத்தல், மரதன் ஓட்டம், முட்டிஉடைத்தல்,தேசிக்காய் சமநிலை ஓட்டம், யானைக்கு கண்வைத்தல், தேங்காய் திருவுதல், ஊசிக்குள் நூல் கோருத்தல் உட்பட புத்தாண்டு கலாச்சாரப் போட்டிகள்,இடம்பெற்றது.இப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளில் மாணவர்களினால் புத்தாண்டின் சிறப்புக்கள்,மகிமைகள்,விருந்தோம்பல் சிறப்புக்கள்இபுத்தாண்டின் பாரம்பரியங்கள் என்பன உரையாற்றப்பட்டது. இதன்போது மாணவர்களுக்கு கைவிஷேசம் வழங்கப்பட்டது.
புத்தாண்டு கலாச்சாரப் விளையாட்டுப்போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டிவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.