ஐக்கிய அரபு நாடான அபூதாபியில் “சமகால முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்கால வாய்ப்புக்களும் சவால்களும்” என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இம்மாநாடு “சர்வதேச முஸ்லிம் சிறுபான்மை காங்கிரஸ்” என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாரம் புதன் மற்றும் வியாழன் ஆகிய இருதினங்களும் நடைபெறும் இம்மாநாட்டில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் கலந்துகொண்டு இலங்கையில் சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து அளிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
இம்மாநாட்டில் உலகின் நாலா பாகங்களிலுமிருந்தும் சமூக செயற்பாட்டாளர்கள், சமூகத் தலைவர்கள், ஆன்மீக அழைப்பாளர்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் பணியாளர்கள் உட்பட சுமார் 4000 செயற்பாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்கின்றார்கள்.
இலங்கையில் இம்மாநாட்டிற்கு செல்லவுள்ள குழுவில், ஏறாவூர் நகர சபைத் தலைவர் ஐ.அப்துல் வாஸித் மற்றும் நகரசபை உறுப்பினர் எம்.ஏ.எஸ்.எம்.சரூஜ் உள்ளிட்டோரும் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.