Breaking

Post Top Ad

Monday, May 14, 2018

மோர்சாப்பிட்டி வை.எம்.ஏ.சி விளையாட்டுக் கழகத்தின் மின்னொளி கரப்பந்தாட்டப் போட்டியில்

(கல்லடி நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட கரப்பந்தாட்ட வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு மோர்சாப்பிட்டி எஸ். சாந்தேஸ்வரன் குடும்ப ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட மின்னொளி கரப்பந்தாட்டப் போட்டியில் வை.எம்.ஏ.சி விளையாட்டுக் கழகம் கல்லடி ஸ்ரீ முருகன் கழகங்கத்தை வெற்றி கொண்டு 2018 ஆம் ஆண்டுக்கான சம்பியனாகத் தெரிவானது.


மட்டக்களப்பு மோர்சாப்பிட்டி வை.எம்.ஏ.சி விளையாட்டுக் கழகத்தின் 90 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய போட்டியில் மாவட்டத்திலிருந்து 32 கழகங்கள் பங்கு பற்றிய போட்டி நேற்று (12) மாலை மட்டக்களப்பு பயனியர் வீதியிலுள்ள அதன் மைதானத்தில் நடைபெற்றது.

அணிக்கு 4 பேர் கொண்ட போட்டிகளில் அரை இறுதிப் போட்டிகளுக்கு திராய்மடு சுவிஸ் லயன், மோர்சாப்பிட்டி வை.எம்.ஏ.சி, மங்கிக்கட்டு கதிரவன் மற்றும் கல்லடி ஸ்ரீ முருகன் என்பனவற்றுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டியில் இறுதிச் சுற்றுக்கு வை.எம்.ஏ.சி மற்றும் கல்லடி ஸ்ரீ முருகன் கழகங்கள் தெரிவாகின.

விளையாட்டுக் கழகத்தின் தலைவர் இ. வைரமுத்து தலைமையில் நடைபெற்ற போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் கலந்து கொண்டு சம்பியனாகத் தெரிவான கழகத்திற்கு வெற்றிக் கிண்ணத்தை நேற்று காலை (13) வழங்கி வைத்தார்.

முதலாம் இடத்தைப் பெற்ற வை.எம்.ஏ.சி விளையாட்டுக் கழகத்திற்கு பரமேஸ்வரி சுப்பிரமணியம் ஞாபகார்த்த சம்பியன் கிண்ணமும், இரண்டாம் இடத்தைப் பெற்ற கல்லடி ஸ்ரீ முருகன் கழகத்திற்கு சோமசுந்தரம் சீவரத்தினம் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணமும், மூன்றாம் இடத்தைப் பெற்ற மங்கிக்கட்டு கதிரவன் கழகத்திற்கு ஆறுமுகம் சுப்பிரமணியம் ஞாபகார்த்தக் கிண்ணமும்  வழங்கப்பட்டன.

போட்டியின் சிறந்த வீரராக வை.எம்.ஏ.சி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஏ.தர்சன் தெரிவானதோடு அவருக்கான வெற்றிக் கிண்ணமும் வழங்கப்படது. இதே கழகத்தின் வீரர்களுன் ஒருவராக வாழைச்சேனை பிரதேச செயலகத்தின செயலாளர் எஸ்.எச் முசமில் கலந்து கொண்டு விளையாடியமை குறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages