இந்த நாட்டின் ஜனாதிபதியும், பிரதம மந்திரியும், இணைந்து நடாத்துகின்ற ஆட்சியிலே கல்வித்துறைக்கு மிகக் கூடுதலாக செலவிடுகின்றார்கள்.
அந்த வகையில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சிலிருக்கின்ற அமைச்சர் மனோகணேசன், மற்றும் தற்போது புதிதாக பிரதி அமைச்சராக பதவி ஏற்றிருக்கின்ற எமது மாவட்டத்தைச் சேர்ந்த அலிசாஹிர் மௌலான அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, உள்ளிட்ட பலரும் எமது மாவட்டம் சார்பாக எமக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றார்கள்.
என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார். மட்.பட்.களுதாவளை மாகாவித்தியாலயத்தில் அமைய அருக்கின்ற 3 மாடிக் கட்டடத்திற்கு அடிக்கல் நட்டு வைத்து விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
இவற்றுக்கு மேலாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சினால் இந்தக் களுதாவளைக் கிராமத்திற்கு 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் ஒரு வீதியும், 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் மற்றுமொரு வீதியுமாக 2 வீதிகள் புணரமைப்புச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
எதுவித கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையில்லாத மாணவர் சமுதாய, எதிர்காலத்தில் சிறந்த மனிதர்களாக திகழ வேண்டும் என்பதையும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. எனவே மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதோடு. நாட்டுக்கு நல்ல பிரஜைகளாகத் திகழ வேண்டும்.
அரசாங்கம் இவ்வாறு பௌதீக வழங்களைச் செய்யும் அவற்றைப் பயன்படுத்தி முன்னேற வேண்டியது எமது கைகளிலே தங்கியுள்ளது. இந்தப் பாடசாலையிலே சுமார் 1500 மாணவர்கள் கல்வி கற்றாலும் நாளாந்தம் சுமார் 5 வீதமான மணாவர்கள் பாடசாலைக்குச் சமூகம் கொடுக்காமலிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது ஒரு வேதனைக்குரிய விடையம் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில்,
ஒன்று தொடக்கம் 13 ஆம் ஆண்டு வரை மாணவர்களுக்கு இலவசக் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். எனவே நாளாந்தம் மாணவர்கள் பாடசாலைக்குச் சமூகம் கொடுத்து கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் கல்விக்கு எவ்வளவுதான் செலவீடுகளைச் செய்தாலும் மாணவர்களின் கல்வியைத் தீர்மானிக்கின்ற இடங்காக பிரத்தியேக கல்வி நிலையங்கள் காணப்படுவதையிட்டு மனவேதனை அடையக்கூடியதாகவுள்ளது. மாணவர்களுக்கு மாடிக்கட்டடங்கள், கதிரை மேசைகள் உள்ளிட்ட பல உதவிகள் வழங்கப்படுகின்றபோதும், பிரத்தியேக வருப்புக்கள் ஓலைக் கொட்டில்களில், முறையான இருக்கைகளின்றி மாணவர்கள் கல்விக்காக வாழ்க்கைகைக் கழிக்கும் நிலையை நாம் மாற்றியமைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.