Breaking

Post Top Ad

Friday, May 25, 2018

தங்கைக்கு ஏற்பட்ட நிலமை! பாசக்கார அண்ணன் எடுத்த நெகிழ்சிசயான முடிவு

சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் இறந்து போன தனது அன்பு தங்கையின் நினைவாக மருத்துவமனை ஒன்றை கட்டியுள்ளார் சாரதி ஒருவர்.

இந்த நெகிழ்சிசயான சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது.
2004 ஆம் ஆண்டு சைதுல் லஷ்கரின் தங்கை மருஃபா, மார்புசளி தொற்றால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை செலவு மற்றும் மருந்து வாங்க முடியாமல் சைதுல் சிரமப்பட்டுள்ளார்.


இதன் விளைவாக, சைதுல் தனது தங்கையை இழந்தார். வறுமையின் காரணமாக தனது தங்கைக்கு மருந்து வாங்கி கொடுத்து அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லையே என்று சைதுல் கவலை கொண்டார்.

தனது தங்கைக்கு ஏற்பட்ட நிலமை இனி எந்த ஏழைக்கும் ஏற்படக்கூடாது, என்னைப்போன்று இனி எந்த அண்ணனும் தங்கையை இழந்து விடாக்கூடாது என்பதற்கு தான் ஒரு மருத்துவமனை கட்டி அதில் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என முடிவு செய்தார்.
தான் உழைத்த பணத்தை சிறுக சிறுக சேமித்து வைத்தார். இது தவிர தனது முயற்சியை நண்பர்களிடம் தெரிவித்து நிதி திரட்டினார். இவ்வாறு கிடைத்த பணத்தின் மூலம், பருய்பூர் அருகின் புன்ரி கிராமத்தில் தனது தங்கை பெயரில் மருஃபா ஸ்ம்ரிதி என்ற மருத்துவமனையை கட்டியுள்ளார்.

சுமார், 12 ஆண்டுகள் இந்த மருத்துவமனையை கட்டுவதற்கு போராடியுள்ளார். 50 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை அதில் எக்ஸ்ரே வசதி, ஈசிஜி என்று எல்லா முக்கிய வசதிகளுடன் இருக்கிறது. 286 நோயாளிகள் அங்கு சிகிச்சை பெறமுடியும். இதன் மூலம் 100 கிராமங்கள் பயனடைந்துள்ளன.

தற்போது, மருத்துவமனையில் 8 மருத்துவர்கள் இலவசமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். சைதுலின் முயற்சியை தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

”இப்போது எனக்கு உதவிட பலர் உள்ளனர். அதனால் என் கனவை முழுவதும் அடைய இன்னும் முயற்சிக்க விரும்புகிறேன்.
மருத்துவமனை கட்டுவதோடு நிற்காமல் ஏழைகளுக்கு உதவ மேலும் பல நல்ல காரியம் செய்ய கனவை நோக்கி செல்லப்போகிறேன்,” என்கிறார் பாசக்கார அண்ணன் சைது.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages