கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றியோருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்காக நடத்தப் பட்ட நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவானோரின் பெயர் விபரங்கள் www.ep.gov.lk எனும் கிழக்கு மாகாண சபையின் உத்தியோக பூர்வ இணையத் தளத்தில் வெளியிடப் பட்டுள்ளன.
மொத்தமாக 456 பேரின் பெயர் விபரங்கள் இதில் உள்ளன. இதில் பாதிக்கப் பட்டோர் மேன் முறையீடு செய்ய விரும்பின் அல்லது முறைப்பாடுகள் ஏதும் இருப்பின் அவற்றை இம்மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் கிழக்கு ஆளுநரின் செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த மேன் முறையீடுகளை பரிசீலிக்க ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே. கருணாகரன் உள்ளிட்ட மூன்று உயரதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை ஆளுநர் நியமித்துள்ளார்.
அத்துடன் தங்களுடை முறையீடுகளை ஆளுனர் செயலாளர். ஆளுநர் அலுவலகம்.உவர்மலை,திருகோணமலை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.