
சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்ட நகர பிரதேசங்கள் கிராமப் புறங்கள் தோறும் இன்றையதினம்(14.05.2018) திங்கட்கிழமை அதிகாலை முதல் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி என்று உரிமை கோரப்பட்டுள்ள அந்தப் பிரசுரத்தில் எரிபொருள்களுக்காக அநீதியான முறையில் உயர்த்தப்பட்ட விலையை உடனடியாகக் குறைத்து விடு' என்று அரசைக் கோரும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
குறிப்பாக ஜனாதிபதி கையை உயர்த்தி மக்களுக்கு சுபசோபனம் கூறும் மட்டக்களப்பு மே தின அழைப்பு சுவரொட்டிகளின் கீழேயும்இ
மேலேயும் இந்த 'அநீதி ! எரிபொருள் விலையை உடனடியாகக் குறை' என்ற சுவெரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருளுக்கான அதிகரித்த திடீர் விலையேற்றம் அனைத்துப் பொருட்களுக்குமான மறைமுக விலையேற்றத்திற்குக்
காரணமாக அமைந்து விடும் என்பதால் இந்த விலையேற்றம் மக்களிடம் அதிருப்தியைத் தோற்றுவித்திருப்பதாக சமூக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.