Breaking

Post Top Ad

Friday, May 25, 2018

கிழக்கில் நவீனமயப்படுத்தப்பட்ட வகுப்பறைகள்

சீனாவின் நிதியொதுக்கீட்டின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட இரண்டு பாடசாலைகளில், நவீனமயப்படுத்தப்பட்ட வகுப்பறைகளை நிர்மாணிக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளை நவீனமயப்படுத்தி, கற்றல், கற்பித்தல் விடயங்களை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததையடுத்து, சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழக ஒன்றிய அங்கத்தவர்கள், திருகோணமலைக்கு, மூன்று நாள் விஜயமொன்றை நேற்று  முன்தினம் 23ம் திகதி மேற்கொண்டனர்.

அவ்விஜயத்தின் போது, திருகோணமலை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சென். மேரிஸ் கல்லூரி, கந்தளாய் அக்ரபோதிய சிங்கள மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கும் விஜயமொன்றை மேற்கொண்டனர்.

அவ்விஜயத்தையடுத்து, மிக விரைவில் இப்பாடசாலைகளில் நவீனமயப்படுத்தப்பட்ட வகுப்பறைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages