Breaking

Post Top Ad

Thursday, May 31, 2018

மட்/ககு/தேவபுரம் கஜமுகன் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

(கலை)
கல்குடா கல்வி கலயத்திலுள்ள தேவபுரம் கஜமுகன் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா வித்தியாலய முதல்வர் ச.தர்முதாஸ் தலைமையில் 31.05.2018 இன்று வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது 

இவ் நிகழ்விற்கு அதிதிகள் மாணவர்களால்   மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு கொடிகள் ஏற்றப்பட்டு இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது 


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர்  நா.குணலிங்கம், கௌரவ அதிதிகளாக கல்குடா கல்விவலய ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு அதிதிகளாக பிரதேசசபை உறுப்பினர்களான க.கமலேஸ்வரன், சு.சுதர்சன் ஆகியோரும் அழைப்பு அதிதிகளாக பிரதேசபாடசாலை அதிபர்கள் சங்கங்களின் தலைவர்கள் ஆலயங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .

இவ் விழாவில் தலைமை உரையினை நிகழ்த்திய பாடசாலை முதல்வர் பாடசாலையில் உள்ள குறைகளை பிரதேசசபை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததனையடுத்து தங்களால் முடிந்த திட்டங்களையும் குறைகளையும் நிவர்த்தி செய்து தருவதாக பிரதேசசபை உறுப்பினர்கள் உறுதியளித்திருந்தனர் பாடசாலை,கோட்டம் வலயம் என போட்டிகளில் சாதனை படைத்தமாணவமாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதிதிகளும் பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டனர்








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages