
யுத்தத்தால் உயிரிழந்த பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று (18) முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
பொதுச்சுடரை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முள்ளிவாய்க்காலில் தனது பெற்றோரை இழந்த இழந்த யுவதியிடம் கையளித்தார். குறித்த யுவதி பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் பொதுமக்கள், அரசியற்பிரமுகர்கள், மதத்தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.