Breaking

Post Top Ad

Thursday, May 31, 2018

எதிர்வரும் ஞாயிறு நள்ளிரவு தொடக்கம் இரு நாள் வேலை நிறுத்தம்

ஜுன் மாதம் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடக்கம் இரு நாட்கள் நாடு தழுவிய ரீதியில்  தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் (ருPவுழு) அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.


ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அச்சங்கம் பொது அறிவிப்பைச் செய்துள்ளது.


இது விடயமாக சங்கம் வெளியிட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டப் கோரிக்கைகளில்ளூ

12 வருடங்களாக நிகழும் அஞ்சல் சேவைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கு,

5 வருடங்கள் கடந்த 2ஆம் வகுப்பு நியமனங்களை உடனடியாக உறுதி செய்,

கணினி தொழிநுட்பக் கோளாறுகளைச் சீர் செய்,

ஜனவரி 10ஆம் திகதி வாக்குறுதியளித்த கெபினெட் பத்திரிகைக்கு அனுமதி வழங்கி தீர்வைப் பெற்றுக் கொடு,

2012 பொறுப்புப் பரீட்சையை   நடைமுறைப்படுத்து,

பொறுப்புக் கொடுப்பனவை   உடனடியாக வழங்கு,

விரிவுரையாளர் சம்பளத்தை புதிய சம்பளத்துக்கு பெற்றுக் கொடு,

பொறுப்புப் பரீட்சையில் சித்தியடைந்த 1ஆம் வகுப்பு உத்தியொகத்தர்களுக்கு எம்.என். 7 வேதன மட்டத்தைப் பெற்றுக் கொடு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தே இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, தபால் திணைக்கள சேவை தொடர்பான யாப்பை மறுசீரமைத்து நடைமுறைப்படுத்தாமை தபால் திணைக்களத்தில் நீண்டகாலமாக நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்படாமை போன்ற இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் கூட்மைப்பும் ஜூன் 12ஆம் திகதி தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages