படத்திலுள்ள பெண் ஒரு சந்தேகநபராவார். அப்பெண்ணை கைதுசெய்யவேண்டும். ஆகையால் அவரை கண்டால், உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்கிஸை பிரதேசத்தில் “சிதார பத்திக்” எனும் பெயரில் வர்த்தக நிலையமொன்றை நடத்திச்சென்று, தைக்கப்பட்ட ஆடைகளை கொள்வனவுச் செய்து, போலியான காசோலையை வழங்கி, ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாயை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தேடப்பட்டுவருபவராவார்.
687611799V என்ற தேசிய அடையாள அட்டை இலக்கத்தை கொண்ட, 50 வயதான, தொன் சித்தாரா கீதானி களுராச்சி என்ற மேற்படி பெண், மொரட்டுவ உயன வீதி இல.06 மற்றும் கெஸ்பேவ தல்கஹஹே வீதி, இல.194/31 ஆகிய விலாசங்களில் வசித்தவராவார் என்றும் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
Tuesday, May 15, 2018
பெண்ணைக் கண்டால் அறிவிக்கவும்
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.