Breaking

Post Top Ad

Thursday, May 24, 2018

வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவி கட்டுரை வரைதலில் தேசிய மட்டத்திற்கு தெரிவு

தமிழ் மொழித்தின எழுத்தாக்கப் போட்டியில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவி ஜெ.அக்ஷித்தா மூன்றாம் பிரிவில் கட்டுரை வரைதலில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன் தெரிவித்தார்.

வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவி ஜெகதீஸ்வரன் அக்ஷித்தா தமிழ் மொழித்தின எழுத்தாக்கப் போட்டியில் கோட்ட மட்டம் வலய மட்டம் மாவட்ட மட்டம் மற்றும் மாகாண மட்டங்களில் தோற்றி தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மாணவியை வழிப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages