Breaking

Post Top Ad

Friday, May 11, 2018

அன்னை பூபதி, தியாக திலீபன், ஜோசப்பரராசசிங்கம் ஆகியோர் சிலைகளை நிறுவுவதற்கு முன்வரவேண்டும்

கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் உட்பட்ட வீதி சுற்று வட்டங்களில் தமிழர்கள் மரபை நிலை நிறுத்தும் வகையில் அன்னை பூபதி, தியாகி திலீபன், ஜோசப்பரராசசிங்கம் ஆகியோர் சிலைகளை நிறுவுவதற்கு முன்வருமாறு கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரம் தெரிவித்தார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு சபையின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

தமிழுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் தம் உயிரை துச்சமென மதித்து தன் உயிரினை ஈத்த என் உயிருக்கும் மேலான மாவீரர் தமிழ்ச் செல்வங்களுக்கு எனது இரு கரங்களையும் கூப்பி வணங்குகின்றேன்.

எமது கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் உட்பட்ட கிரான் சுற்று வட்டம், கும்புறுமூலை சுற்று வட்டம், வாழைச்சேனை பெற்றோல் நிலைய சுற்று வட்டம் ஆகிய மூன்று சுற்று வட்டங்களுக்கும் தமிழர்கள் அடையாளங்கள் அழிந்து வருவதால் அதனை தமிழர்கள் மரபை நிலை நிறுத்துமாறு அன்னை பூபதி, தியாக திலீபன், ஜோசப்பரராசசிங்கம் ஐயா இவர்களின் சிலைகளை சுற்று வட்டத்தில் தமிழர்களின் அடையாளமாக நிறுத்த வேணும் என்று தவிசாளரிடம் கோரிக்கையை முன் வைக்கின்றேன்.

மேலும் எமது கிராமங்களில் மணல் ஒழுங்கைகள் அதிகமாக காணப்படுகின்றது. வீதி விளக்குகளும் எமது வட்டாரத்திற்கு தேவைப்படுகிறது. என தெரிவித்ததுடன்.

மேலும் எமக்கு வாக்களித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி கூறுகின்றேன். 

என்றார்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages