Breaking

Post Top Ad

Saturday, May 19, 2018

கோயில் ஆலமரத்தை வெட்டி தீய கயவர்களுக்கு துணைபோவது நியாயமா?

மட்டக்களப்பு, கருவேப்பங்கேணி சிவ நாகதம்பிரான் ஆலய முன்றலில் நின்ற ஆலமரம் ஒன்று சில விசமிகளால்  கடந்த டிசம்பர் மாதம் வெட்டி வீழ்த்தப்பட்டது தொடர்பில் செய்திகள் வௌிவந்தது.

இதனை பிரதேச செயலக அதிகாரியின் வாய் மூலமான அனுமதியுடன் வெட்டப்பட்டதான அவ்விடத்தில் விளையாடும் சில இளைஞர்கள் ஊடாக தெரியவருகின்றது.


கருவேப்பங்கேணி சிவ நாகதம்பிரான் ஆலய வளாகத்தில் ஆலய நிருவாகத்தினரால் நடப்பட்டு கடந்த 13 வருடங்களாக பராமரித்துவந்த ஆலமரத்தை வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது.

ஆலமர ஓரத்தில் புகையிரதக் வீதியில் விளையாடிவிட்டு வேலையற்று பொழுதைக் கழிக்கும் வேறு பிரதேசத்திலிருந்து வந்த சில இளைஞர்களே இதை வெட்டியதாகவும் கருவேப்பங்கேணி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ் விடத்திலிருந்து போதைப் பொருட்களை பாவித்து விட்டு,  மதுபான போத்தல்கள், டின்கள் உள்ளிட்ட பொருட்கள் இரவு நேரத்தில் போடப்படுவதாகவும் பிரதேச மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

விளையாட்டுக்கென ஒதுக்கப்பட்ட மைதானம் ஆலயத்தின் பின்னால் ஓரே வேலிக்கு அப்பால் உள்ளது. (அருகில்)

இருப்பினும் இக் குறிப்பிட்ட வேறு கிராமங்களிலிருந்து வரும் இளைஞர்களும் கருவேப்பங்கேணி கிராம இளைஞர்களும் ஓரிருவரும் இணைந்து மேற்படி புகையிரதத் திணைக்களத்தால் ஒதுக்கப்பட்டு ஆலய பராமரிப்பில் இருந்த காணியையே பொழுதுபோக்காக விளையாடி வந்த நிலையிலேயே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இச் சம்பவத்திற்கு கருவேப்பங்கேணி இளைஞர்கள் கடும் கண்டனத்தை வௌியிட்டுள்ளனர்.









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages