Breaking

Post Top Ad

Thursday, May 17, 2018

முள்ளிவாய்கால் நினைவு தினத்தையோட்டி பல்கலை மாணவர்களின் இரத்த தான முகாம்

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையினை நினைவுகூரும் முகமாக கிழக்குப் பல்கலைக் கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை (17) இரத்ததான முகம் நடைபெற்றது.

மே 18 இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற ஒரு இனஅழிப்பு நாள். இந்த இனப்படுகொலையினை நினைவுகூரும் முகமாக தமிழர் தாயகத்தில் அனைத்து இடங்களிலும் அனுஷ்டிப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாக கிழக்குப் பல்கலைகழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் இரத்ததான முகம் நடைபெற்றுள்ளது.


கிழக்குப் பலக்லைக் கழக அனைத்து பீடங்களையும் சேர்ந்த நுற்றுக்கணக்கான மாணவர்கள் இதன்போது இரத்த தானம் செய்தனர். நாளை (18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பூசை ஆராதனைகள் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டள்ளதாகவும் இதன் போது மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages