Breaking

Post Top Ad

Tuesday, May 29, 2018

யாழ். பல்கலை சமூகம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

தமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரைலெட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை துப்பாக்கிச் சூடு நடத்திய தமிழகப் பொலிஸாரின் வெறிச் செயலைக் கண்டித்தும் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேருக்கு நீதிவேண்டியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் இன்று (28) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக முன்றலில் நண்பகல் 12 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரெலைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்களால் நடத்தப்படும் மாபெரும் போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது தமிழகப் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவி உள்பட 12 பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages