மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தின் இதர பகுதிகளிலும் நுண் கடன் நிதியைப் பெற்றுக் கொள்வதால் வறிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநருக்கு எடுத்து விளக்கி நுண்கடன் வழங்குவதற்குரிய புதியதொரு கொள்கை வகுப்பை உருவாக்குவதற்கான யோசனைகளுடன் தாங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவைச் சந்திக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஆளுநருடனான தமது சந்திப்பில் சமூர்த்தி வங்கிகளில் முடங்கிப் போயிருக்கும் பல்லாயிரம் ரூபாய் மக்களின் பணத்தை பிரதேச மக்களின் வாழ்வாதார சுயதொழில் முயற்சிகளுக்கு வழங்கினால் நுண்கடன் நிதிகளைப் பெற்றுக் கொள்வதிலிருந்தும் அதனால் உண்டாகும் பாதக விளைவுகளிலிருந்தும் மக்களைப் பாதுகாக்கலாம் என்ற யோசனை அடங்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இச்சந்திப்புக்கு ஆளுநர் பணிமனை அனுமதி வழங்கியுள்ளதாகவும் சந்திப்பு வெகு விரைவில் நடக்கும் என்றும் சமூகநல செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.