Breaking

Post Top Ad

Friday, May 11, 2018

மலையகத்தில் நாய்களை கடித்துக் குதறும் சிறுத்தைகள்: மக்கள் கவலை!

மலையகத்தில் மீண்டும் சிறுத்தைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக குடாகம பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியில் வரமுடியாத அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.தமது வீட்டு வளர்ப்பு நாய்களை கூடுகளிலே வளர்த்து வருவதாவும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகைத்தரும் சிறுத்தைகள் கூடுகளை உடைத்து நாய்களை கொன்று விடுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்தபோதும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, சிறுத்தைகளுக்கு பட்டசு வெடிகள் வைத்த நிலையில் சிறிதுகாலம் சிறுத்தையின் நடமாட்டம் குறைவடைந்திருந்த போதிலும் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு சிறுத்வதைகளின் வருகை அதிகரித்துள்ளதாக மக்கள் அங்கலாய்த்துள்ளனர்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages