இந்த வரலாற்று எச்சங்கள் காணப்படும் காட்டுக்குள் கடந்த சில தினங்களாக இராணுவத்தினர் மாலை வேளைகளில் சென்று வருவதனை பொது மக்கள் அவதானித்துள்ளனர்.
அத்தோடு நேற்றைய தினம்( செவ்வாய் ) பிரிகேடியர் தர இராணுவ அதிகாரிகள் சகிதம் சென்று குழுவினர் நீண்ட நேரமாக குறித்த பிரதேசத்தில் இருப்பதனை கேள்வியுற்ற மக்கள் அங்கு சென்று அவதானித்த போது பெருங் கற்கால வரலாற்று எச்சங்களான கருங்கல் தூண்கள், மற்றும் செங்கல் மேடுகள் உள்ள பகுதியில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதனை கண்டு மக்கள் அதிர்ச்சியுற்றுள்ளனர்.
குறித்த பிரதேசம் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமானது இங்கு அகழ்வு பணிகள் உள்ளிட்ட எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது என அறிவித்தல் பலகையும் காணப்பட்ட நிலையில் இராணுவத்தினர் அகழ்வுப் பணிகளில் ஈடுப்பட்டமையானது மக்களிடம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் பௌத்த துறவியுடன் இராணுவத்தினர் சில தடவைகள் குறித்த பிரதேசத்திற்கு வருகைதந்து பார்வையிட்டு சென்றதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அப்போது தாங்கள் இதனை பெரிதுபடுத்தவில்லை என்றும், ஆனால் நேற்றைய தினம் இந்த வரலாற்று எச்சங்கள் உள்ள பகுதிகள் அகழப்பட்டுள்ளது, எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு காணப்படுகிறது இந்த இடங்களில் காணப்படுகின்ற தமிழர் வரலாற்று எச்சங்களை அகற்றிவிட்டு அந்த இடங்களில் பௌத்த பண்பாட்டை பிரதிபலிக்கும் பொருட்களை புதைக்கும் நடவடிக்கையினை மேற்கொள்கின்றனரா எனவும் தமக்கு பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.