யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதத்தில் சென்ற தமிழ் பெண் ஒருவருக்கு மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் ஏசிய ஊழியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர், இன்று காலை புகையிரதத்தில் யாழ்ப்பாணம் சென்ற போது, சிங்கள மொழி ஊழியர், குறித்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
அத்துடன், “நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, பொலிஸாராலும் யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு நான் தான் பெரியவன்” என்று மிரட்டும் தொனியில் குறித்த ஊழியர் அனைவரையும் மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும்,
“துன்புறுத்தல்கள் மற்றும் இனவெறிக்கு இந்த நாட்டில் இடமில்லை. இவ்வாறான செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேணடும். மீண்டும் இது போல் ஒரு சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக இவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்” என தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கவனத்திற்கு புகையிரத திணைக்களத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.