(படுவான்.எஸ்.நவா)

வரலாற்று சிறப்பு மிக்க வெல்லாவெளி கல்லடி ஐங்கரனின் ஆலயத்திலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட அடியார்கள் பால்குட பவணியூடாகக் மேளதாள வாத்தியங்கள் முழங்க நாதேஸ்வரம் ஒலிக்க பிரதான வீதிவழியாக பக்திபரவசத்துடன் பிரதான ஆலயத்தினை சென்றடைந்து ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வர பெருமானுக்கும் ஸ்ரீமுத்துமாரியம்பாளுக்கும் ஸ்ரீமகாவிஸ்னு பெருமானுக்கும் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் பால்பிஷேகம் செய்யப்பட்டிருந்தது சிறப்பம்சமாகும்
ஆதனைத் தொடந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட அடியார்கள் புடைசூழ அம்மனின் பிரதான கும்பம் ஜாகசாலையிலிருந்து எழுந்தருளி ஆலயத்தின் உள்வீதியூடாக வலம்வந்து ஆலயத்தின் பிரதான இடத்திற்கு கும்பம் கொண்டு செல்லப்பட்டது. பின்பு விசேட பூசைகள் இடம்பெற்று அடியார்களுக்கு விபூதிகள் சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.