கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடான நிலைமையில், ராஜபக்சவினர் அல்லாத ஒருவரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முன்னாள் பெண் அமைச்சர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தை சேராத இந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் கூட்டு எதிர்க்கட்சிக்குள் இருக்கும் கருத்து முரண்பாடுகளை களைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தவிர அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிட வேண்டும் எனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.