கடந்த உள்ளூராட்சி மன்றத் தேரத்தலின் போது, தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட, அநுராதபுரம் வலயக் கல்விக் காரியாலயத்துக்கு உட்பட்ட ஆசியர்கள், தமக்கு இதுவரை அதற்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லையென தெரிவிக்கின்றனர்.
தேர்தல் முடிவடைந்து மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும், அதிகாரிகள் கொடுப்பனவை வழங்காது புறக்கணித்து வருவதாக, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு பலமுறை கூறியும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் அநுராதபுரம் உதவித் தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்நாயக்கவுடன் தொடர்பு கொண்டு வினவிய போது,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, 3,000 ஆசிரியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டனர். இவர்கள் 1,000 பேர் அநுராதபுரம் வலயக் கல்விக் காரியாலயத்துக்கு உட்பட்டவர்கள். சில ஆசிரியர்கள் கொடுப்பனவு வழங்குமாறு சமர்ப்பித்த கடிதங்களில் சில குறைப்பாடுகள் காணப்பட்டன. கொடுப்பனவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பினும், பெரும்பாலானோருக்கு உரிய முறையில் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டார்.
Post Top Ad
Tuesday, May 15, 2018
Home
Unlabelled
தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட ஆசிரியர்களின் கொடுப்பனவு தாமதம்
தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட ஆசிரியர்களின் கொடுப்பனவு தாமதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.