Breaking

Post Top Ad

Friday, May 11, 2018

புலிகளுக்கு எரிபொருள் விநியோகித்த நபரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு..!

திருகோணமலை – சிரிமாபுர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பலியானவர், தெல் குமார எனப்படும் செலின் குமார என்ற வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 5.30 அளவில், குறித்த பிரதேசத்தில் உள்ள வீதியோரத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றில் இருந்த குறித்த நபர் மீது மகிழுந்தில் பயணித்த மூவர் துப்பாகி சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது 45 வயதுடைய வர்த்தகர்; கொல்லப்பட்டார்.

உயிரிழந்தவர், முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எரிபொருளை விநியோகித்து வந்தவர் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

உயிரிழந்த தெல் குமார என்பவருக்கு குற்றச்செயல்கள் புரியும் குழு ஒன்றுடன் தொடர்பு இருந்து வந்துள்ளதாகவும், சிரேஸ்ட காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த குற்றச் செயல்களை புரியும் குழுவினராலேயே அவர் சுட்டிக்கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சிரேஸ்ட காவற்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages