Breaking

Post Top Ad

Tuesday, May 29, 2018

மட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் ஆடம்பர வாழ்கை நடத்துகின்றனர் - எமது தலைமுறை கட்சித் தலைவர் கருணாநிதி

புலம்பெயர் அமைப்புகளிடம் தமிழ் மக்களுக்கென நிதி திரட்டி  ஆடம்பர வாழ்கை நடத்தும் அரசியல்வாதிகள் மட்டக்களப்பில் உள்ளனர் ஆனால் தமிழ் கிராமங்கள் இன்னும் இருளில் மூழ்கிக் காணப்படுகின்ற என எமது தலைமுறை கட்சித் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்தார்.


நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப 'எமது தலைமுறை கட்சி'  (Our Generation Party)  என்ற பெயரில் புதியதொரு கட்சி இன்று (29) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் அங்குராட்பணம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு கொம்மாதுறை நிருபா ஹோட்டலில் கட்சித் தலைவர் சிதம்பரம் கருணாநிதியின் ஏற்பாட்டில் ஊகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது இங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். கட்சியின் பொதுச் செயலாளராக தயாளன் அல்போன்ஸ் மற்றும் பொருளாளராக வேலுப்பிள்ளை சுமங்களா நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் - பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தைக் கடக்கும் வழியில் உள்ள மட்டக்களப்பு நகர் உட்பட தமிழ் மக்கள் வாழும் பகுதிகள்  மிகவும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. முஸ்லிம் கிராமங்களான ஓட்டமாவடி, ஏறாவூர் மற்றும் சின்ன குவைத் என்று அழைக்கப்படும் காத்தான்குடி போன்றன மிகவும் அழகாகவும் வெளிச்சமாக காணப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளார்கள் ஆனால் இந்த அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் வசந்த மாளிகை கட்டி ஆடம்பரமாக வாழ்கின்றனர். இலங்கையில் எந்த நகர பகுதிகளிலும் இல்லாதவாறு குடிசை வீடுகள் மலசலகூடங்கள் இல்லாத நிலை மட்டக்களப்பில் உள்ளது.

இலங்கையில் நான் அறிந்து 9 மாகாணங்கள் உள்ளன அவற்றுக்கொன தனித்தனி சபைகள் முதலமைச்சர்கள் உள்ளார்கள். வடக்கு கிழக்கு இணைக்க வேண்டும் என்பது  அறிவீனமான வாதம், வடக்கு கிடக்கில் இரண்டு சிறுபான்மை சமூக முதலமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கிடைக்க வேண்டிய வாய்ப்பை இந்த இணைப்புக் கோரிக்கை என்பது இல்லாதொழித்துவிடும்.


முடிவுறாமலும், எதுவித தீர்வுமில்லாமலும் தொடர்கதையாகியுள்ள நாட்டு மக்களின் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய அரசியல் வழிநடத்தல்கள் இல்லாத குறை நீண்ட காலமாக நிலவி வருகின்றது.

சம காலத்தில் அவசியமும் அவசரமுமான இத்தேவையைக் கருத்திற் கொண்டு எழுந்த சிந்தனையொட்டத்தின் அடிப்படையிலும் மக்களின் ஆதங்கத்தின் அடிப்படையிலும் புதிய போக்கில் சிந்தித்து செயற்படக் கூடிய மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல் கட்சியொன்றின் தேவை உணரப்பட்டுள்ளது.


அதன் காரணமாக புத்தாக்கம் மிக்க புதிய அரசியல் கட்சியாக எமது தலைமுறைக் கட்சி எனும் பெயரில் இக்கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.

இந்த தேசத்தின் அடுத்து வரும் தலைமுறை அழிவுகளைக் கடந்து ஆக்கபூர்வமாக இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.


இன, மத, சாதி. மொழி, பிரதேச, பால் ரீதியான அனைத்து வகைப் பாகுபாடுகளையும் ஓரங்கட்டல்களையும் களைந்து நேசம் மிக்க தேசத்தின் புதல்வர்களாக புதல்விகளாக அமைதியும் அபிவிருத்தியும் மிக்க இலக்கை நோக்கிச் செல்வதே இக்கட்சியின் குறிக்கோளாகும்.

தொடர்ச்சியான இயங்கு திறனுடனும் அடிப்படையில் சில கொள்கை வகுப்புக்களுடனும்  செயற்படுவதற்கு ஏற்றாற்போல எமது கட்சி முன் கொண்டு செல்லப்படும்.

இக்கட்சியில் பதவி வகிப்போரின் குடும்ப அங்கத்தவர்களுக்கு எவ்விதத்திலும் எவ்விதமான பதவிகளும் வழங்கப்பட மாட்டாது.

முற்று முழுதாக குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் கட்சியே எமது தலைமுறை கட்சி.


தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கே சந்தர்ப்பம் வழங்கப்படும் எக் காரணம் கொண்டும் குடும்ப அங்கத்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது.

கட்சி பதவிகளில் கடுமையான நோயுற்றவர்களும் இயங்க முடியாத வயோதிபத்தை அடைந்தவர்களும் பதவியில் இருந்து ஒதுங்கிக் கொண்டு திடகாத்தரமான, ஆளுமையுள்ள, அறிவாற்றலுள்ள, திறமையானவர்களுக்கும் அப்பதவி வழங்கப்பட வேண்டும், இதுபோன்று இன்னும் பல புதிய அரசியல் கலாசாரங்கள் இக்கட்சியூடாக நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

எனவே எதிர்வரும் காலங்களில் அமைதியை விரும்பும் இலங்கையர் அனைவரும் புதிய தலைமுறைக் கட்சியில் இணைந்து நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரத்தை வழங்குவதில் பங்களிப்புச் செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம். எனறார்   
No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages