Breaking

Post Top Ad

Monday, May 28, 2018

ஒரே நாளில் ஒரே வயதுடைய இரு யுவதிகளின் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு - ஏறாவூர் மற்றும் கரடியனாறு ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளிலும் ஞாயிற்றுக்கிழமை 27.05.2018 யுவதிகள் இருவரின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு – பதுளை வீதி கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கனித்தீவு கிராமத்தைச் சேர்ந்த  சௌந்தரராஜன் வினோதினி (வயது 19) என்பவரின் சடலம் அவர் பெற்றோருடன் வசித்து வந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை  ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள குமாரவேலியார் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் நிஸாந்தினி (வயது 19) என்பவரின் சடலமும் அவர் பெற்றோருடன் வசித்து வந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. 

இச்சம்பவங்கள் தொடர்பாக மேலதிக  விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


ஒரே நாளில் ஒரே வயதையொத்த இரு யுவதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பட்டதா அல்லது வௌ;வேறானதா என்ற விரிவான விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages