நேற்று காலை சிறைக்குவரும் பொதுமக்களின் விபரங்களை பதிவு மேற்கொள்ளும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடைய கைபேசியை அவர் கடமைபுரியும் அலுவலகத்திற்குள் இருந்து எடுத்துக்கொண்டு ஓடிய குரங்கை கலைத்துச் சென்ற குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைபேசியை மரத்திலிருந்த குரங்கிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக கல் ஒன்றினை குரங்கினை நோக்கி எறிந்தபோது குரங்கு கைபேசியின் கவரினை கீழே போட்டுள்ளது மீண்டும் ஒரு கல்லினை எறிந்தபோது பற்றறியை கீழே போட்டது இதையடுத்து வாழைப்பழம் ஒன்றினை குரங்கை நோக்கி வீசியபோது கைபேசியை கீழே போட்டு விட்டு வாழைப்பழத்தைப் பெற்றுக்கொண்டு குரங்கு சென்றுவிட்டது. மரத்திலிருந்து கீழே வீழ்ந்த கைபேசியானது கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் பாவனை செய்ய முடியாத நிலையிலுள்ளது. இவ்வாறு குரங்குகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது இதனைக்கட்டுப்படுத்தவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் நடைமுறைப்படுத்த முடிவதில்லை இதனால் பல இழப்புக்களையும் சந்திக்க நேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு வவுனியா சிறைச்சாலையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருடைய பெறுமதியான கைபேசியை எடுத்துக் கொண்டு ஓடிய குரங்கு அதனை சேதப்படுத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.