Breaking

Post Top Ad

Saturday, May 12, 2018

விளாத்திக்குளத்தைப் புனரமைத்து தருமாறு கோரிக்கை

முல்லைத்தீவு துணுக்காய் அனிஞ்சியன்குளம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற விளாத்திக்குளத்தைப் புனரமைத்து அதன் கீழ் உள்ள விவசாய நிலங்களை பகிர்ந்தளிக்குமாறு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள அனிஞ்சியன்குளம் பகுதியில் 850 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றபோதும் கூடுதலான குடும்பங்கள் அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு வாழ்ந்து வரும் மக்கள் தமக்கான பயிர்ச்செய்கை காணிகளை பெற்றுத்தர ஆவண செய்யுமாறு கோரி வருகின்றனர். ஆதாவது, அனிஞ்சியன்குளத்திற்கு மேலாக உள்ள கைவிடப்பட்டு சேதமடைந்த காணப்படுகின்ற விளாத்திக்குளத்தினை புனரமைத்து அதன் கீழ் காணப்படுகின்ற வயல் காணிகளை வனலாகாவிடம் விடுவித்து தமக்குப் பகிர்ந்தளிக்குமாறு கோரியுள்ளனர்.

குறித்த கோரிக்கையானது, கடந்த மாதம் துணுக்காய் பிரதேசத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் முன்வைக்கப்பட்டதுடன், இம்மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றும் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages