Breaking

Post Top Ad

Wednesday, May 16, 2018

மட்டக்களப்பு மாவட்டம் எல்லே போட்டியில் நான்காவது தடவையாகவும் சம்பியன்

கிழக்கு மாகாண மட்ட பெண்களுக்கான  எல்லே போட்டியில் நான்காவது தடவையாகவும் மட்டக்களப்பு மாவட்டம் முதலாமிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளதாக ஏறாவூர்ப்பற்று பிரதேச விளையாட்டு உத்தியோகஸ்;தர்  அப்புத்துரை சிவகுமார் தெரிவித்தார்.


44வது தேசிய விளையாட்டு விழாவிற்கு முன்னோடியாக கிழக்கு மாகாண விளையாட்டு விழா திருகோணமலையில் நடைபெற்றது.

செவ்வாக்கிழமை (15) பிற்பகல் நடைபெற்ற பெண்களுக்கான எல்லே போட்டியில்   மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக பங்கு பற்றிய ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச செயலக பிரிவு அணி முதலாமிடத்தைப் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தினை திருகோணமலை மாவட்ட அணி பெற்றது.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages