முள்ளிவாய்க்கால் நினைவு தின அனுஷ்டிப்பு மட்டக்களப்பு - பன்குடாவெளியில் உணர்வுபூர்வதாக அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுக்கள் செய்யப்பட்டுள்ளதாக செல்லாம் குழுமத் தலைவர் கணபதிப்பிள்ளை மேகன் தெரிவித்தார்.
தமிழினப் படுகொலை நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் காலை 9 மணிக்கு இரத்த தானம், 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி விஷேட பூஜை என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாலை 6.30 மணிக்கு பன்குடாவெளி ஆற்றங்கரை முற்றத்தில் உணர்வுபூர்வமாக 1000 சுடர்கள் ஏற்றறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முள்ளிவாய்காலில் உயிர்நீத்த எமது உறவுகளின் ஆத்மா சாந்திவேண்டி ஏற்பாடு செய்யப்ட்ட உணர்வு பூர்வமான நினைவேந்தலில் கட்சி இன, இன, மத வேறுபாடுகளின்றி அன்னைவரும் கலந்துகொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.