இப்பகுதியில் உள்ள 68 ஆவது படைப்பிரிவினர் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக மின்சார இணைப்பை வழங்கியுள்ளனர். இதில் சிக்குண்டு யானை உயிரிழந்துள்ளது.
யானையின் உடலை பரிசோதனை மேற்கொண்ட வடபிராந்திய வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை மருத்துவ உத்தியோகத்தர் பா.கிரிதரன், “யானை மின்சாரத்தாக்குதலுக்கு உள்ளாகியே உயிரிழந்துள்ளது. குறித்த யானை 35 அகவையுடையது. இது இன்னும் நீண்ட காலம் வாழக்கூடியது என்றும் வடக்கில் இவ்வாறான இன யானைகள் மூன்றையே காட்டில் கண்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.